×

காங்கிரஸுக்கு அதிக வாக்குகளை தந்த ராஜாஜிபுரம் வாக்குச்சாவடி

ஈரோடு: ராஜாஜிபுரம் வாக்குச்சாவடியில் காங்கிரஸுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளது. இதுவரை வெளியான முடிவுகளின்படி, காங்கிரஸுக்கு அதிக வாக்குகள் கிடைத்திருப்பது ராஜாஜிபுரம் வாக்குச்சாவடியில்தான். வழக்கமாக ராஜாஜிபுரம் வாக்குச்சாவடியில் அதிமுகவுக்கே அதிக வாக்குகள் கிடைக்கும். ஆனால் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளில் 80% வாக்குகள் காங்கிரஸுக்கு கிடைத்துள்ளது. இரவு 9.30 வரை வாக்குப்பதிவு நடைபெற்ற ராஜாஜிபுரம் வாக்குச்சாவடியில் மட்டும் காங்கிரஸுக்கு 1055 வாக்குகள் கிடைத்துள்ளன. மொத்தம் பதிவான 1,314 வாக்குகளில் அதிமுகவுக்கு வெறும் 226 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன.


Tags : Rajajipuram ,Congress , Rajajipuram polling station gave the most votes to the Congress
× RELATED பீடி புகைத்துக் கொண்டிருந்தபோது...